ரஜினியின் அடுத்த பிளான் என்னனு தெரியுமா?
இமயமலை பயணத்தைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த பிளான் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இமயலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா சென்ற அவர், அங்கிருந்து மற்ற இடங்களுக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொள்கிறார். அத்துடன், மலைப்பாதையில் நடைபயணமும் மேற்கொள்கிறார்.
கடந்த 10ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், 15 நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார். அதன்பிறகு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனத்தை மேற்பார்வையிடுகிறார். அதன்பிறகு அமெரிக்கா செல்கிறார். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் செய்யும் உடல் பரிசோதனை செய்யவே அவர் அமெரிக்க செல்கிறார்.