ரஜினியின் ‘’அண்ணாத்த’’ பட புதிய அப்டேட்
ரஜினியின் அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில்
அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு கதை செல்வதாகக்க் கூறப்படுகிறது.
அண்ணன் தங்கை பாசத்தை வைத்து இதுவரை வெளியான , கிழக்குச் சீமையிலே, வேலாயுதம் போன்ற படங்களின் வரிசையில் படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும் ரஜினி அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், 4 வது சிங்கில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தின் 4 வது பாடலான வா சாமி என்ற பாடலை பிரபல பாடகர் திருமூர்த்தி, சம்சுதீன், முகேஷ்முகமது ஆகியோர் இணைந்து