வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (13:44 IST)

ரஜினிகாந்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நாளை இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை நம் அனைவருக்கும் ஒரு சிறந்த நாள். ரஜினிகாந்த் அவர்கள் ஒரு சிறந்த மனிதர் மற்றும் இந்திய சினிமாவில் உண்மையான சூப்பர் ஸ்டார்
 
இவருக்கு மாண்புமிகு பிரதமர் அவர்களால் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். சூப்பர் ஸ்டார் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்