செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (12:10 IST)

தாதாசாகே பால்கே விருது: ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. 
 
இதனை அடுத்து விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நேற்று ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றார் என்பதும் இன்று அவர் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தாதாசாகேப் பால்கே விருது பெற இருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்