வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (13:16 IST)

இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகர் ரஜினிகாந்த்! – ஆளுனர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தமிழ் நடிகரான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி “பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி. நல்ல உடல்நலத்தோடு நீடூடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.