1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (09:21 IST)

கைதட்டி நன்றி சொல்லுறதுல கூட ரொமான்ஸ் தான்... விக்கி - நயன் அட்ராசிட்டி!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.


மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸால் ஓய்வில்லாமல் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் செலிவிலியர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒருசேர கைதட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தங்களது காதலை கொரோனாவிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.