ப்ளீஸ் தயவுசெய்து வீட்டிலே இருங்க... கொரோனா விழிப்புணர்வு செய்த தனுஷ் - வீடியோ!
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.
மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் , கமல் ஹாசன் , ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா விழுப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய தனுஷ் மருத்துவர்களையும் அவர்களது சேவைகளையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் போது மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து மருத்துவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என பரிந்து கேட்டுக்கொண்டுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்...