புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (16:11 IST)

நடிகை சித்ராவின் மரணத்தில் மர்மம் ? போலீஸார் விளக்கம்

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தற்கொலைதான் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் சித்ராவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என போலீஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் சித்ராவின் முகத்தில் இருந்த கீரல்கள் குறித்து பலரும் கேள்விகள் எழுப்பினர்.  அத்துடன் அவரது தாய் தனது மகள் தற்கொலை செய்யுமளவுக்குக் கோழை இல்லையென்றும் அவரது கணவர் மீதும் பகிரங்கமாகச் குற்றம்சாட்டினர்.

தற்போடு இதுகுறித்துப் போலீசார் கூறியுள்ளதாவது :

சித்ரா தற்கொலை செய்துகொண்டது அவரது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளது. அவரது முகத்தில் உள்ள காயம் என்பது அவரே ஏற்படுத்தி கொண்டவை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறியுள்ளனர்.#chitra #murder #actrresschitra