1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (07:42 IST)

சித்ராவுக்கு இப்படி நடக்கும் என எனக்கு முன்கூட்டியே தெரியும்: தோழியின் அதிர்ச்சி பேட்டி!

சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு இவ்வாறு நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சின்னத்திரை சித்ரா நேற்று திடீரென தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து போலீசார் அவரது கணவர் என்று கூறப்படும் ஹேமந்த் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவர் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
இந்த நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா ராயர் என்பவர் இதுகுறித்து கூறும்போது சித்ரா கடந்த சில நாட்களாகவே போலி புன்னகையுடன் மன அழுத்தத்தில் இருந்தார். அவரது நிச்சயதார்த்த போட்டோவை பார்த்தால் இது நிச்சயம் தெரியவரும். அவருக்கு கணவராக வரக்கூடிய ஹேமந்த் ரவியை எனக்கு நன்றாக தெரியும். அவர் பல பெண்களுடன் தொடர்பு உள்ளவர். சித்ராவிடம் இதை என்னால் நேரடியாக கூற முடியவில்லை என்பதால் நண்பர்கள் மூலம் கூறினேன் 
 
ஆனால் சித்ராவின் கண்களை காதல் மறைத்தது. சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் விரைவில் பிரச்சனை வரும் என்றும் அதனால் சித்ராவுக்கு இவ்வாறு நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஹேமந்த் வன் அதிரடியான ஆள் இல்லை, ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு சைலன்ட் கில்லர் என்று சித்ராவின் தோழி ரேகா நாயர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது