வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (15:11 IST)

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலைதான்! – போலீஸார் தகவல்!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தற்கொலைதான் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் முகத்தில் இருந்த கீரல்கள் அவரே ஏற்படுத்தி கொண்டவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.