திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:04 IST)

''என்னோட தம்பி விஜய்''.. பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

vijay
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராதாரவி. இவர்  சினிமாவில் நடிப்பதுடன் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன் அவ்வப்போது, மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அத்துடன் அரசியலில் பல அதிரடி கருத்துகள் கூறி வருகிறார்.

இந்த நிலையில்.விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சர்க்கார் என்ற படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில், ராதாரவி இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் விஜயுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து என்னோட தம்பி என்று பதிவிட்டுள்ளார்.
 
vijay-radha ravi

இப்புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே விஜய்68 படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என இணையதளத்தில் தகவல் வெளியாகிறது.