திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:42 IST)

ரஜினியும் விஜய் சேதுபதியும் பிடிக்கும் – தமிழ் சினிமாவை ரசிக்கும் இலங்கை கிரிக்கெட்டர்!

கொரோனா காலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தனது யுடுயூப் சேனல் மூலமாக பலரையும் நேர்காணல் செய்து வருகிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் வரிசையான நேர்காணலில் சமீபத்தில் இணைந்து இருப்பவர் இலங்கையின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். இவரிடம் பேசிய அஸ்வின் தமிழ் சினிமா பற்றி சில கேள்விகளையும் கேட்டார். அதில் ‘உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு ரஜினியும் விஜய் சேதுபதியும் பிடிக்கும் எனக் கூறினார்.

மேலும் ரஜினியின் சிவாஜி திரைப்படமும் விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா திரைப்படமும் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். விஜய் சேதுபதி முரளிதரனின் பயோபிக்கில் அவர் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.