வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:52 IST)

கவின் இயக்கத்தில் நடிக்கும் முகின்..ரசிகர்கள் பாராட்டு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்  ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் முகின். இவரை வைத்து கவின் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் முகின். இவர் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திற்கு வேலன என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் முகினுகு ஜோடியாக மீனாக்‌ஷி என்பவர் நடிக்கவுள்ளார்.

மேலும் சூரி, தம்பி ராமையா,  மரியா போன்ற நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இப்படம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.