இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! துவங்கியது நாமினேஷன் பிராசஸ்..!
பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டைக்காரி சொர்ணாக்காவாக அனைவரையும் ஆட்டி படைத்து வந்த வனிதா நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதனையடுத்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற நாமினேஷன் பிராசஸ் துவங்கியுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் யார்.. யாரை நாமினேட் செய்கிறார்கள் என பார்க்கலாம்.
வாரத்தின் முதல் நாள் நாளான இன்று நாமினேஷன் இதுவங்கியது இதில் முதலாவது ஆளாக லொஸ்லியா மீராவை சொல்ல, பின்னர் மோகன் வைத்தியா, சரவணனை நாமினேட் செய்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சரவணன் மோகன் வைத்தியா சிறுபிள்ளை தனமாக கோபப்படுவதால் அவரை சொல்கிறார். பின்னர் மீரா மிதுன் மிதுன், தன்னை ஏமாற்றியதாக சொல்லி தர்ஷனை நாமினேட் செய்தார். பின்னர் தர்ஷன், சேரன் மீராவையும், சாக்ஷி தனது நெருங்கிய தோழியாக இருந்த அபிராமியை நாமினேட் செய்தார். ஷெரின் சரவணன் மற்றும் மீராவை நாமினேட் செய்தார்.
எனவே இந்த வார நாமினேஷனில் மீரா முதலாவது இடத்தில் உள்ளார். அவருக்கு வெளியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மக்கள் சப்போர்ட் செய்வதில்லை எனவே இந்த வாரம் எவிக்க்ஷனில் மீரா மிதுன் வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.