வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (17:04 IST)

யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேஷனை அதிரடியாக அறிவித்த கமல் - ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3ல் பாத்திமா பாபுவிற்கு பிறகு இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. கடந்த வாரத்திலிருந்து வனிதா நிச்சம் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என அனைவரும் கூறிவருகின்றனர். 


 
இந்த வாரத்திற்கான நாமினேஷனில் வனிதா, மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றனர். ஆனால் அவரை வெளியே அனுப்பிவிட்டார் நிகழ்ச்சின் கன்டென்ட் இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவர் இன்னும் கொஞ்சம் நாள் வீட்டினுள் தங்க வைக்கப்படுவார் எனவும் கூறிவந்தனர். மற்றறொரு புறம் இந்தவார நாமினேஷனில் இருந்து  வைத்யா வெளியேற போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது மக்கள் யாரும் எதிரிபார்க்காத வகையில் கமல் ஹாசன் மிகப்பெரிய ட்விஸ்டை கொடுத்து ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களையும்  அதிரவைத்துவிட்டார். அதாவது அனைவரும் எதிர்பார்த்த வகையில் வனிதாவே இந்த வராம் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த தகவல் என்னவென்றால்,  வனிதா வீட்டில் ஆடிய ஆட்டத்தையெல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு வாங்கு வாங்குனு வாங்கியுள்ளாராம் கமல். மேலும் வனிதாவை லெஃப்ட் அண்ட் ரைட்டு விட்ட தர்ஷனையும் கமல் வெகுவாக பாராட்டியுள்ளாராம்.  எனவே இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.