1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (18:35 IST)

மீடூ - பிரீத்தி ஜிந்தா 'நையாண்டி’நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

சில நாட்களுக்கு முன் பிரீத்தி நீண்ட நாட்களுக்கு பிறகு மீடூ பற்றி கருத்து கூறி இருந்தார். அத்ல் மீடூ இயக்கத்தை சிலர் பழிவாங்கலுக்காக பயன் படுத்திவருவதாக கூறீயிருந்தார். ஆனால் அவரது பேச்சு நெட்டிசன்களிடையே கார -  சாரமான விவாதங்களை உண்டு பண்ணியது.
இந்நிலையில் பிரீத்தி ஜிந்தாவின் அந்த வீடியோ பேட்டியை பார்த்தவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பலவாறு தெரிவித்தனர். அந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் பதிவிட்டிருப்பதாவது:
 
மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பேசாதீர்கள் இவ்வாறு திட்டியுள்ளனர்.
 
இதுபற்றி பிரீத்தி ஜிந்தா கூறியதாவது:
 
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் பாலிவுட்தான். நான் மீடூ இயக்கத்தி பற்றி தவறாக பேசவில்லை. நான் பேசிய வீடியோவை யாரோ மாற்றி எடிட் செய்துள்ளனர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.