திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (10:37 IST)

நிஜத்திலும் ஹீரோவென நிரூபித்த சிவகார்த்திகேயன்!! புகழும் நெட்டிசன்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாமனிதர் நெல் ஜெயராமனை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நெல் சாகுபடியை அடுத்த படிக்கு எடுத்து சென்றதில் நெல் ஜெயராமனுக்கு முக்கிய பங்குண்டு. உலகம் முழுவதும் நெல் திருவிழா என்ற பேரியக்கத்தை உருவாக்கி நெல் சாகுபடியில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் தான் நம் ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நல்லது செய்பவர்களுக்கு தான் காலம் இல்லை என்பது போல, ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் சந்தித்து ஆறுதல்களையும் , உதவிகளையும் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்தியேன், ஜெயராமனுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுக்குறித்து இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்த்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் நெல்_ஜெயராமன் தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கியுள்ளார் நெல் ஜெயராமன். மேலும் ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் ஏற்பதாக சொல்லி இருக்கிறார் சிவா. இதனால் சிவகார்த்திகேயனை பலர் பாராட்டி வருகின்றனர்.