1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

"மரண மாஸில்" எஸ்.பி.பியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்!

பேட்ட "மரண மாஸ்" பாடலில் எஸ்.பி.பி.க்கு ஓரிரு வரிகளை மட்டும் கொடுத்துவிட்டு தனக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக்  கொண்ட அனிருத் மீது எஸ்.பி.பி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதே நேரத்தில் அனிருத்தின் ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி மரண கலாய் கலாய்த்துள்ளனர். 
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர். 
 
இப்படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் நேற்று (டிச 3) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. அதன் படி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் நேற்று 6 மணிக்கு பாடலை வெளியிட்டது. 
 
எதிர்பார்த்த அளவிற்கு மரணம் மாஸ் பாடல் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அனிருத் தனது தலைவருக்காக மரண மாஸ் இல்லை அதை விட மரண மாஸாக டியூன் போடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு இருந்ததால் மரண மாஸ் பாடல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மேலும் எஸ்.பி.பி.யை ஓரிரு வரியை மட்டும் பாட வைத்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல படத்திற்கு பாடல் பாடியுள்ள எஸ்.பி .பி  "மரண மாஸில் "ஓரிரு வரிகள் மட்டுமே பாடி சென்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 


இதனை எண்ணி ரசிகர்களை பலரும் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். 
 
பாடகர்களுக்கெல்லாம் லெஜெண்டான எஸ்.பி.பி எப்படி பாட்டு பாடுவது என்று அனிருத் சொல்லிக் கொடுத்ததற்கான மீம்.
 
 
மரண மாஸ் பாடலில் தந்து போஷனுக்காக காத்திருந்த எஸ்.பி.பி. 
 
பாடினது போதும் கிளம்புங்க சார்...


 
எம்புட்டு பெரிய மனுஷனை இப்படி இரண்டு வரி மட்டும் பாட வைத்திருக்கிறார் இந்த அனிருத் கடுப்பாகிய எஸ்.பி.பி. ரசிகர்கள் 


 
கெஸ்ட்டுக்கே கெஸ்ட் ரோலா?