'பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'மரணமாஸ் பாடலில் உள்ள மாஸ் வரிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் 'மரணமாஸ் தலைவர் குத்து பாடல் சற்றுமுன் வெளிவந்து ரஜினி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த பாடலில் உள்ள வரிகள் தலைவரின் மாஸை காட்டும் வகையில் உள்ளது.
'தட்லாட்டம் தாங்க' தர்லாங்க சாங்க'
'உள்ளார வந்தான்னா பொல்லாத வேங்க'
என்ற மாஸ் வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் அதனையடுத்து
'கெத்தா நடந்து வர்றான்
கேட்டையெல்லாம் கடந்து வர்றான்
ஸ்லீவ்வ சுருட்டி வர்றான்
காலரத்தான் பெரட்டி வர்றான்'
ஆகிய அனிருத் பாடிய வரிகள் தலைவரின் கெத்தை உணர்த்துகிறது.
இதன்பின்னர்தான் தொடங்குகிறது எஸ்பிபி பாடும் வரிகள்
'எவண்டா மேல, எவண்டா கீழே
எல்லா உயிரையும் ஒண்ணாக பாரு அன்பு சேரு
தலையில் ஏத்தி வச்சு கொண்டாடு ஊரு'
ஆகிய வரிகள் ரசிகர்களுக்கு சொல்லும் அறிவுரையாகவும்,
நியாயம் இருந்து எதிர்த்து வர்றியா
உன்னை மதிப்பேன் அது என் பழக்கம்
கால இழுத்து உயர நினைச்சா
கெட்ட பய சார் இடியாய் இடிக்கும்
ஆகிய வரிகள் தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கையையும், தன்னை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ள வரிகள்
ஆக மொத்தம் இந்த மரணமாஸ் தலைவர் குத்து பாடல் தலைவரின் மாஸை காட்டிவிட்டது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.