இந்தியில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த 2.0
லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சயக்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
29ம் தேதி அன்று 20.25 கோடியும், 30ம் தேதி வெள்ளிக்கிழமை 18 கோடியும், சனிக்கிழமை 25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 34 கோடியும், திங்கட்கிழமை 13.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் 5 நாளில் 111 கோடி ரூபாய் வசூலாகி 2.0 பெரும் சாதனை படைத்து உள்ளது.