1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:19 IST)

விஷாலின் ‘எனிமி’ படத்தில் இணைந்த நடிகை: 9 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி!

விஷால் நடித்து முடித்துள்ள 'சக்ரா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் இன்னொரு திரைப்படமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் ’எனிமி’. இந்த படத்தில் மிருணாளினி நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் துபாயில் நடைபெற உள்ளது என்பதும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான விஷாலின் ’சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ் அதன்பின் ’குரு என் ஆளு’ ’தடையறத்தாக்க’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் 
 
2012ஆம் ஆண்டு வெளியான ’தடையறத்தாக்க’ படத்திற்கு பின் 9 ஆண்டுகளுக்கு பின் அவர் தமிழில் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது