செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (16:21 IST)

எனது போட்டோவை மார்பிங் செஞ்சிட்டாங்க: பிரபல ஊடகத்தை குற்றஞ்சாட்டும் மாளவிகா மோகனன்!

எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டுள்ளனர் என பிரபல ஊடகத்தை நடிகை மாளவிகா மோகனன் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இந்த புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதாகவும் இது போன்ற மலிவான வகையில் செயல்படும் ஊடகத்திற்கு ஆதரவு தர வேண்டாம் என்றும் இது போன்ற புகைப்படம் யாராவது பதிவு செய்தால் அது குறித்து புகார் அளிக்க தனக்கு உதவி செய்யவும் என்றும் மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவர் திடீரென இவ்வாறு புகார் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.