திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:04 IST)

ஜோதிமணியின் புகார் குறித்து பேச விரும்பவில்லை… செந்தில் பாலாஜி நழுவல்!

கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோதிமணி எம்பியை திடீரென திமுக நிர்வாகிகள் வெளியே போ என கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து நான் என்ன விருந்து சாப்பிடவா வந்துள்ளேன்? அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டு இப்படி அசிங்க படுத்துகிறீர்களே?  இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா என ஆவேசமாக பேசிய ஜோதிமணி எம்பி கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் ஜோதிமணி வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ‘கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற எல்லாக் கட்சிகளோடும் கூட்டணிப் பகிர்வு முடிந்துவிட்டது. காங்கிரஸ் தலைமையோடு எங்கள் கட்சி தலைமை பேசி இறுதி செய்யப்படும். ஜோதிமணியின் புகார் குறித்து இப்போது பேச விரும்பவில்லை’ எனக் கூறி சென்றார்.