சமந்தா, த்ரிஷா , நயன்தாரா 3 இன் 1 - அசத்தும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளாக ஹீரோக்களுக்கு நிகராக பெரும் ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர்கள் நயன்தாரா , சமந்தா , த்ரிஷா. இதில் த்ரிஷா கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னனி இடத்தில இருந்து வருகிறார்.
நயன்தாரா கொஞ்சம் தாமதாக வந்தாலும் கோலிவுட்டின் இன்றைய லேடி சூப்பர் ஸ்டாராக சிறந்து விளங்கி வருகிறார். இதையடுத்து சமந்தா திரையில் நுழைந்த குறிகிய காலத்தில் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு இடித்த நடிகர் , நடிகைகள் மீது அலாதி பிரியம் வைத்து இருப்பதால் அவர்களை போலவே உடை அணிந்து கொள்வது , ஸ்டைல் , மிமிக்கிரி என பல விஷயங்ககளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள் அந்தவகையில் தற்ப்போது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பெண் ஒருவர் சமந்தா, த்ரிஷா , நயன்தாராவே போன்றே Recreation மேக்கப் செய்துகொண்டு அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.