செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:28 IST)

காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம்பிடித்த நடிகர் - கடும் மன உளைச்சலில் திரிஷா!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் முழு நேரமும் வீட்டில் இருந்து வந்தாலும் அவ்வப்போது மட்டும் இன்ஸ்டாவில் எதையேனும் பதிவிட்டு அப்பப்போ வந்து தலை காட்டுவார். இந்நிலையில் திரிஷா திடீரென நேற்று தனது இன்ஸ்டாவில் இருந்த பழைய புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்துவிட்டு வெறும்  7 புகைப்படங்கள் மட்டுமே விட்டு வைத்துள்ளார்

ஏன்? என்ன ஆனது. த்ரிஷா அக்கவுண்ட்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வர... அப்படி எதுவும் இல்லை. என்னுடைய கணக்கு ஹேக் ஆகவில்லை என த்ரிஷா தெரிவித்துவிட்டார். அப்போ வேறு என்ன...? எதாவது மனக்கஷ்டத்தில் இப்படி செய்திருப்பாரா என ஆளாளுக்கு பேசி வர தற்ப்போது அதன் உண்மை வெளிவந்துள்ளது.

ஆம், த்ரிஷா - நடிகர் ராணா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதால். ராணா வேறு ஒரு பெண்ணை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் இருந்தாலும் த்ரிஷாவால் இந்த விஷயத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரம் கிசு கிசுகிறது.