வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:50 IST)

ஒரு வருடம் காக்க வைத்த நயன்தாரா: வாய்ப்பை தட்டிப்பறித்த டாப்சி

ஒரு வருடம் காக்க வைத்த நயன்தாரா: வாய்ப்பை தட்டிப்பறித்த டாப்சி
இயக்குனரை ஒரு வருடம் நயன்தாரா காக்க வைத்த நிலையில் அந்த வாய்ப்பை நடிகை டாப்சி தட்டிப்பறித்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜஸ்தானை சேர்ந்த தடகள வீரர் விளையாட்டு வீராங்கனை ஒருவர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை நந்தா பெரியசாமி என்ற இயக்குனர் உருவாக்க முடிவு செய்து அதற்கான கதை திரைக்கதையை முழு அளவில் அவர் தயார் செய்து நயன்தாராவிடம் கதை கூறினார் 
 
நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் பிடித்துப் போய்விட, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் கண்டிப்பாக இந்த படத்தை பண்ணலாம் என்று உறுதி கூறியிருந்தார். இதனை அடுத்து நயன்தாராவுக்காக அந்த இயக்குனர் ஒரு வருடம் காத்திருந்தார். ஆனால் நயன்தாராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை
 
இந்த நிலையில் இந்த கதையை கேள்விப்பட்ட நடிகை டாப்சி, இந்தக் கதையில் நானே நடிக்கிறேன் நானே தயாரிப்பாளரை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதோடு, நந்தா பெரியசாமிக்கு ஒரு மிகபெரிய தொகையை அட்வான்ஸாகவும் கொடுத்துள்ளார்.
 
இதனால் மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் நந்தா பெரியசாமி உடனடியாக பட வேலையை தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது
 
பாலிவுட்டில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த படத்திற்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நல்ல படத்தை நயன்தாரா மிஸ் செய்துவிட்டார் என்றே இயக்குனர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது