திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (17:59 IST)

’மதராஸி’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? ஆர்வத்துடன் காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

’மதராஸி’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? ஆர்வத்துடன் காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து, அதன் ஓடிடி வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 
செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்த 'மதராஸி', ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் இதுவரை உலகளவில் மிகப்பெரிய தொகை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
'மதராஸி' திரைப்படம், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran