1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (19:27 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாளை வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் மதுமிதா வெளியேற்றப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது 
 
ஜெர்மனியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்த மதுமிதா நாற்பதே நாட்களில் எலிமினேஷன் ஆகி வெளியே இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இருப்பினும் அவர் இருந்து 40 நாட்களும் பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது