1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:09 IST)

செருப்பக் கழட்டி அடிச்சு சொல்லு - அனல் பறக்கும் பிக்பாஸ் ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. அதில் உள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக திட்டி மோதிக்கொள்வது இந்த சீசனின் சிறப்பம்சமாக பார்க்கமுடிகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் அடக்கி வைத்திருந்த அதனை கோபத்தை காட்டிவிட்டனர். 
 
ஆம், முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியமில்லாமல் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்களை தேர்வு சொல்லுங்கள் என்று பிக்பாஸ் சொன்னதும் வீட்டில் உள்ள அத்தனை பேரும் ராஜு மற்றும் அண்ணாச்சியை கைகாட்டினார்கள். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது செம கடுப்பான ராஜு செருப்பு கழட்டி ஒரு அடி அடிச்சுட்டு சொல்லு என கொந்தளித்துவிட்டார். இந்த ப்ரோமோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.