1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (13:51 IST)

11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷாலின் ‘மத கஜ ராஜா’.. விரைவில் ரிலீஸ் ஆகிறதா?

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா என்ற திரைப்படம் 11 ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா என்ற திரைப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்பட பலர் நடித்திருந்தனர் என்பதும் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆக தயாராக இருந்த நிலையில் பொருளாதார பிரச்சனைகள் அடுக்கடுக்காக வந்தது என்றும் இந்த படத்தின் பட்ஜெட்டை விட இந்த படத்தின் மீதான கடன் அதிகரித்ததாக கூறப்பட்டது. இதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது .
 
இந்த படத்தின் கடனை அனைத்தும் நானே ஏற்றுக் கொண்டே ரிலீஸ் செய்கிறேன் என்று விஷால் கூறியும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் செய்து குறித்து அறிவிப்பு வெளியேறும் என்றும் கூறப்படுகிறது .
 
Edited by Siva