விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து மீதிப் படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாக விஷால் அறிவித்திருந்தார்.
ஆனால் திட்டமிட்டபடி படக்குழு லண்டன் செல்லவில்லை. அதற்குப் படத்துக்கு தேவையான பைனான்ஸ் கிடைக்கவில்லை என்பதே காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் விஷாலின் ரத்னம் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் அவரை நம்பி பைனான்சியர்கள் பைனான்ஸ் தர முன்வரவில்லையாம். அதனால் துப்பறிவாளன் 2 படத்தை டிராப் செய்யும் முடிவில் இருக்கிறாராம் விஷால்.