ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (15:26 IST)

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் விரைவில் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில் நடிகர் விஷாலை வைத்து அவர் ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் விஷாலின் சமீபத்தைய படங்களும் கௌதமின் சமீபத்தைய படங்களும் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமைந்ததால் அந்த படத்தை தயாரிப்பதாக இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டதாம்.