புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (19:36 IST)

சீமான் தொடங்கி வைக்க... சேரன் கிளாப் போர்டு அடிக்க.. முதல் டேக்கில் கெத்து காட்டிய சிம்பு - வீடியோ !

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த செய்தியை கேட்ட சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறன்றனர்.

தற்போது மீண்டும் ரசிகர்கள் மனமகிழ்ச்சி அடையும் வகையில் சிம்புவின் முதல் ஷாட் வீடியோ ஒன்றை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். சிம்புவிற்கு வாழ்த்து கூறி சீமான் துவக்கி வைத்த இந்த படத்தின் முதல் காட்சியை இயக்குனர் சேரன் க்ளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தார்.