1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (18:45 IST)

சிம்புவுக்கு நன்றி – குட்டி ஸ்டோரி பாடலாசியர் நெகிழ்ச்சி !

சிம்பு

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் ஹிட்டாகியுள்ள நிலையில் சிம்பு பாடலாசிரியரை பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.  காதலர் தினமான நேற்று முன் தினம் இப்படத்தில் இடம்பெறும் " ஒரு குட்டி கத" என்ற பாடல் வெளியானது. இப்பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கூடவே எதிர்மைறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதி இருந்தார்.

பாடல் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் இன்று டிவிட்டரில் அவர் ‘குட்டிக் கத பாடலின் மேல் நீங்கள் காட்டிய அன்புக்கும் நேர்மறையான எண்ணத்திற்கும் நன்றி எஸ் டி ஆர் சார்.  உங்களிடம் இருந்து பாராட்டைப் பெறுவதில் பெருமையாக உள்ளது. ஆல்வேஸ் பி ஹேப்பி’ எனத் தெரிவித்துள்ளார்.