வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (20:45 IST)

சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ: அதிரடி அறிவிப்பு!

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க உள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ படத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளிவந்துள்ளது
 
ஹன்சிகாவின் 50வது திரைப்படமான ’மஹா’ படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகதான் இருந்தது. ஆனால் இந்த கதையால் இம்ப்ரஸ் ஆன சிம்பு, தனது கேரக்டரை விரிவுபடுத்தும்படியும் அதற்குத்தான் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறியதை அடுத்து அவரது கேரக்டர் விரிவுபடுத்தப்பட்டது 
விமான பைலட்டாக இந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தற்போது அவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்றும் அவரது கேரக்டர் பக்காவாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் யார் என்பது குறித்து தகவலை சற்று முன்னர் இயக்குனர் ஜமீல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளார் 
 
இந்த படத்தில் வில்லனாக நடிப்பவர் பிரபல ஹீரோ ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் ஸ்ரீகாந்த் இருப்பது போன்றும் அவரை துப்பாக்கியால் காட்டி கருணாகரன் மற்றும் தம்பிராமையா மிரட்டி இருப்பது போன்றும் இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “எல்லோரும் ஹீரோக்களே... எல்லோரும் வில்லன்களே.. அது யார் கதை சொல்கிறார்கள் என்பதை பொறுத்தது. மஹா படத்தின் கதாபாத்திரம் ஒன்றை வெளியிடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது