புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (17:45 IST)

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்

சிம்பு நடிக்க உள்ள அதிரடி ஆக்ஷன் அரசியல் திரைப்படமான மாநாடு திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் மேலும் மூன்று நடிகர்களும் ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து உள்ளனர்
 
நடிகர்கள் உதயா, பஞ்சு சுப்பு மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளதாகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் இந்த படத்தின் கலை இயக்குனராக பணிபுரிவார் என்ரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்
ஏற்கனவே இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் புதிதாக 3 நடிகர்கள் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை பிரமாண்டமாக நடைபெற்ற பூஜையில் சீமான் பாரதிராஜா வெங்கட் பிரபு உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சுறுசுறுப்பாக நடைபெற உள்ளது என்பதும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது