வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (09:27 IST)

ரஜினியின் 'தர்பாரில்' இன்று முதல் இணையும் நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வருவது தெரிந்ததே. இதுவரை ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இன்று முதல் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது
 
ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் மற்றும் குடும்ப காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் படமாக்கப்படவிருப்பதாகவும், இந்த படத்தில் நயன்தாராவுக்கு இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கெட்டப் இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி கசிந்துள்ளது
 
சென்னையில் விஜய்யுடன் 'தளபதி 63 படப்பிடிப்பிலும் , ஐதராபாத்தில் சிரஞ்சீவியுடன் 'ஸ்ரீசயிர நரசிம்மரெட்டி' படப்பிடிப்பிலும், மும்பையில் ரஜினியுடன் தர்பார் படப்பிடிப்பிலும் நயன்தாரா மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது