பிக் பாஸ் 3 சீசனில் நயன்தாரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான நயன்தார சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துவரும் நயன்தாரா கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா முழுக்க கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் தன்னுடைய இடத்தை யாரும் எட்டி பிடிக்கமுடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் நயன் வளர்ந்து வரும் பல நடிகைகளுக்கு டஃப் கொடுத்துவருகிறார்.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் 63 மற்றும் தர்பார் ஆகிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் வலம் வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், இதுவரை சினிமாவில் கலக்கி வந்த நயன் தற்போது சின்னத்திரைக்கு வருகிறாராம். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில்அதிகாரபூர்வமாக கலர்ஸ் சேனலில் நேற்று நயன்தாரா நம் சேனலுக்கு வருகிறார், செம்ம சர்ப்ரைஸ் உள்ளது என கூறினார்கள்.
ஆனால். இவர் சிறப்பு விருந்தினராக வருகிறாரா இல்லை எதாவது தொடரில் விருந்தினர் தோற்றத்தில் வருகிறாரா என்று தெரிவிக்காததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் நயன் எதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரோ எனவும் மற்றொரு புறம் சில ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.
இதை வைத்து பார்க்கையில் ஒருவேளை பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நயன்தாரா தொகுத்து வழங்குகின்றாரா என ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றனர், எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.