'லியோ' பட வெற்றி விழா: பிரமாண்டமாக தயாராகும் அரங்கு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த படம் லியோ.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வரும் நிலையில்,
இப்படத்தின் வெற்றிவிழாவை நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதன்படி, காவல்துறையில் அனுமதி கேட்டிருந்த நிலையில்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான மேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், போலி டிக்கெட்டுகள் அச்சிடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.