வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (21:34 IST)

விஜய்யின் ''லியோ'' அமெரிக்காவில் 1500 தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் லியோ.

தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள இப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு வியாபாரமும் பெரியளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, லியோ படத்தை அமெரிக்காவில் மட்டும் 1500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.