வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (11:33 IST)

’லியோ’ பாத்தேன்.. Interval அல்லு விட்ருச்சு! – Goosebumps ஆன தயாரிப்பாளர்!

Leo
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் லியோ படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.



நடிகர் விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத் என பெரும் நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லோகேஷின் கடந்த படங்களான மாஸ்டர், விக்ரம் அதிரிபுதிரி ஹிட். அதனால் லியோ மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. படத்தின் பாடல்கள், கதாப்பாத்திரங்களின் Glimpse வீடியோக்கள் என வெளியாகும் அனைத்தும் இணையத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தை குறித்து அதன் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது அவர் “விஜய்யின் திரைப்பயணத்தில் லியோ ஒரு சிறந்த படமாக இருக்கும். படத்தின் 8 நிமிட இடைவேளை காட்சியை பார்த்தபோது எங்களுக்கே கூஸ்பம்ப்ஸ் ஆனது. கண்டிப்பாக தியேட்டர்களில் ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் எகிறி வருகிறது.

Edit by Prasanth.K