கேஜிஎஃப் படத்துக்குப் போட்டியாக வெளியாகும் அமீர்கான் படம்!
அமீர்கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இந்த படத்தௌ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேதியில் எதிர்பார்ப்புக்குரிய கேஜிஎப் 2 திரைப்படமும் இந்தியா முழுவதுமாக வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.