எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா லாபம்? இதுவரையிலான வசூல் எவ்வளவு?
லாபம் படம் இதுவரை மொத்தமாகவே 6 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
கொரோனா முதல் அலையால் 8 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் திறக்கப்பட்ட போது பார்வையாளர்களை மறுபடியும் இழுக்கும் விதமாக மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் ரிலிஸாகின. ஆனால் இரண்டாம் அலைக்குப் பின்னர் திரையரங்குகள் மூடப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் வெளியானது. இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் கடைசி படம் என்பதால் அதன்மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இதனால் படம் போட்ட பணத்தைக் கூட எடுக்காது என சொல்லப்படுகிறது.