திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (10:03 IST)

தமிழ் சினிமாவுக்கு வரும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி… 10 படங்கள் தயாரிக்க முடிவு!

தமிழ் சினிமாவில் பாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களான டி சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் இரண்டும் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளனர்.

தமிழில் இப்போது பிரம்மாண்ட படங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என்றால் அது லைகா மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். மாஸ் ஹீரோக்கள் அனைவரும் இவர்களின் படங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்போது பாலிவுட்டில் கோலோச்சி வரும் டி சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் தமிழில் 10 படங்களை தயாரிக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.