வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:22 IST)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குட்டி பத்மினி நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’

நடிப்பிற்கு நீண்ட இடைவெளிவிட்ட குட்டி பத்மினி, ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
அறிமுக இயக்குநர் ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. தமிழ், பெங்காலி மற்றும் ஹிந்திப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர்  படமாக இது உருவாக இருக்கிறது.
 
பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், உதயா ஹீரோவாக நடிக்கிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று  ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும், நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சோனியா போஸ்  உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டி பத்மினி இந்தப் படத்தில் நடிக்கிறார்.