திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:07 IST)

ஸ்லிம்மான அனுஷ்காவின் வைரல் புகைப்படம்

நடிகை அனுஷ்காவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட்  போட்ட அனுஷ்கா. அதன் பிறகு பாகுபலி 2 படத்தில் வெயிட்டை குறைக்க முடியாமல் திணறினார். அதனால் அனுஷ்காவின்  வெயிட் பிரச்சனை பாகுபலி 2 படத்திற்கு தலைவலியாக மாறியது.
அனுஷ்காவை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் ராஜமெளலி கன்டிஷன் போட்டார். ஆனால் அனுஷ்காவால் முடியவில்லை. இதையடுத்து கிராபிக்ஸ் மூலம் அவரை ஒல்லியாக காட்டினார்கள். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ்  நடித்து வரும் சாஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வெயிட் பிரச்சனையால் இழந்தார்.
 
இந்நிலையில் அனுஷ்கா ஸ்பெஷல் பயிற்சியாளரை வரவழைத்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து, இத்தனை மாதங்களாக  குறையாத எடை தற்போது குறையத் துவங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனுஷ்கா தற்போது பாகமதி என்ற  படத்தில் நடித்து வருகின்றார், இந்த படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வருகின்றார்.
 
சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. தற்போது வெயிட்டை குறைத்து ஸ்லிம்மான அனுஷ்காவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில்  வைரலாகியுள்ளது. 
 
இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம அனுஷ்காதானா என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.