திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth

வணங்கான் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… ஒப்பனாக பேசிய கீர்த்தி ஷெட்டி!

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவும் அவரது தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது இயக்குனர் பாலா தன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் படத்தை இயக்கி வருகிறார் பாலா. படத்துக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம். கதாநாயகியாக ரோஷினி ராஜபிரியன் நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் சூர்யா விலகியதை அடுத்து முன்னர் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன கீர்த்தி ஷெட்டியும் படத்தில் இருந்து விலகினார். அதுபற்றி தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் “படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலகும் சூழல் உருவானது. மற்றபடி படக்குழுவினரோடு எந்த பிரச்சனையும் இல்லை” எனக் கூறியுள்ளார்.