1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 4 மே 2023 (11:43 IST)

மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் - வீடியோ!

கடந்த 80களில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் உள்பட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார் என்பதும் அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவர் இருந்துள்ளார். இதையடுத்து  கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா நேற்று சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். அவருக்கு விஜய் உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 
 
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து தொடங்கியது. மனோ பாலாவின் உடலுக்கு பொது மக்கள் வழி நெடுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.