வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (09:11 IST)

சாக்சி என்னை காலி பண்றா! கவினின் ஆவேசத்தால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் முதல் இரண்டு வாரங்கள் பிளேபாய் போல் ஜாலியாக இருந்து வந்த கவின், கடந்த ஒரு வாரமாக மிகவும் சோகமாக இருக்கிறார். சாக்சி உடனான காதல் தோல்வி, லாஸ்லியாவுடன் மனக்கசப்பு ஆகியவை அவரை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது
 
அதே நேரத்தில் கவின் குணாதிசயத்தில் சில மாற்றங்கள் இருப்பதாக பார்வையாளர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடமும் ஜாலியாக இருந்து, சாக்சியுடன் மிக நெருக்கமாக பழகி, பின்னர் திடீரென அவரை கைவிட்டு விடுவதாக கவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் 'சாக்சி காலி செய்கிறாள் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும், இனிமேல் அவள் பக்கமே நான் போக மாட்டேன் என்றும் கவின் கூறுகிறார். அதற்கு சரவணன் சமாதானப்படுத்த முயற்சிக்க, மதுமிதாவும் அறிவுரை கூற, எதையுமே காது கொடுத்து கேட்க முடியாத சூழ்நிலைகள் இருக்கிறார் கவின்
 
இந்த நிலையில் லாஸ்லியா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சாக்சிக்கு ஏற்பட்ட இந்த அநியாயத்திற்கு நான் தான் காரணம் என்றும், தயவு செய்து இது குறித்து யாரிடம் என் யாரும் என்னிடம் கலந்து பேச வேண்டாம் என்றும் அழுகையுடன் தெரிவிக்கிறார். மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சி, கவின், லாஸ்லியா ஆகியோர்களின்  முக்கோண காதலால் பெரும் பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது