திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (09:20 IST)

கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி

பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.
 
இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே' என்று பதிலளிக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்சி, தனியே சென்று அழ ஆரம்பிக்க அவருக்கு ஷெரின் ஆறுதல் கூறுகின்றார்.
 
மேலும் ஒருசிலர் லாஸ்லியாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கின்றார். 'நான் எப்போதுமே அன்பாகத்தான் இருப்பேன், பின்னால் நின்று பேசும் அவசியம் எனக்கு இல்லை' என்று கூறுகின்றார். இதேபோல் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கான விளக்கத்தை கூறும் இந்த டாஸ்க்கில் ஒருசில மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது